3 வயது சிறுவன் கொலையை மூடி மறைக்க உதவிய பொலிஸார்; நீதி கேட்டு கதறி அழும் தாய்

0
116

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் கடந்த மாதம் 30ம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நியாயம் என சிறுவனின் தாய் இன்று ஊடகங்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று (20) மாலை மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது குறித்த தாயார் விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் என அவர் கதறி அழுத வண்ணம் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு காவல்துறை இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் தனது வாக்குமூலத்தை கூட பதிவு செய்யவில்லை எனவும் பொலிஸ் மீது பேருந்து சாரதி மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.