எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி திறக்கப்பட உள்ள City of Dreams ஹோட்டலின் கேசினோ திறப்பு விழாவில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams நிர்வாகம் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தினர்.
முன்னதாக ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என்று பேஸ்புக் பக்கம் குறிப்பிடுகிறது.
