அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

0
17

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு இருபது பேரில் ஒருவருக்கு வரும் ஒரு அரிய நோய் வந்துள்ளதாகவும் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தம் சரியாக திரும்பவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் ட்ரம்புக்கு காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு பரிசோதனை செய்ததில் கிரானிக் வீனஸ் இன்சஃபிசியன்சி (Chronic Venous Insufficiency) என்ற நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் உலக அளவில் 20 பேரில் ஒருவரைப் பாதிக்கும் எனவும் கால்களில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பாததால் இது ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நோயினால் ரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் வீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் நிலை இது என்றும் கூறப்படுகிறது.

தற்போது அதிபர் ட்ரம்ப் தகுந்த மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் அவர் பூரண குணமடைந்து விடுவார் என எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். e

இரண்டாவது முறை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அதிபர் டிரம்ப் வரிகள் உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது அவர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.