உக்ரைன் தாக்குதலில் ரஷ்யாவின் முக்கிய தளபதி உயிரிழப்பு

0
27

உக்ரைனுடனான போரில் மேலும் ஒரு முக்கியமான ரஷ்ய தளபதி உயிரிழந்துள்ளார். ரஷ்ய கடற்படையின் துணைத் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் மிகைல் குட்கோவ், குர்ஸ்க் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரிமோர்ஸ்கி மாகாண ஆளுநர் ஒலெக் கொஜெம்யாகோ வெளியிட்ட அறிக்கையில், குட்கோவ் தனது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது வீரச்சாவடைந்தார் எனத் தெரிவித்தார்.

குட்கோவ், கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி புதின் ஆணைப்படி, கடற்படையின் தரைத்தள மற்றும் கரையோரப்படைகள் பொறுப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டிருந்தார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் உக்ரைனிய படைகள் திடீர் பிரவேசித்த பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் குட்கோவ் கொல்லப்பட்டார். இது மூன்றாண்டுகளாக நீடித்து வரும் போரில் உயிரிழந்த மிக உயர்மட்ட ரஷ்ய தளபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்கோவ் தலைமையிலிருந்த 155வது கடற்படை படையணியான புசா, உக்ரைனின் இர்பின், கோஸ்டோமெல் உள்ளிட்ட நகரங்களில் மேற்கொண்ட பொதுமக்கள் படுகொலை மற்றும் போர் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த படையணி உக்ரைனில் பல போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு உக்ரைனும் சர்வதேச விசாரணையாளர்களும் வெளியிட்டுள்ள ஆதாரங்களை ரஷ்யா மறுத்துள்ளது.