கிழக்கில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்

0
24

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளூர் அதிகார சபை அமைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு சுயாதீன ஊடகவியலாளரை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட பிபிசி தமிழ் சேவை சுயாதீன ஊடகவியலாளர் யு. எல். மப்றூக் நேற்றிரவு (ஜூலை 2) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியா மசூர் உட்பட மூன்று பேர் தனது ஊடக அறிக்கையிடலைக் கேள்வி எழுப்பிய பின்னர் தன்னைத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊடகவியலாளரை தாக்கிய இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ரியா மசூர் கடந்த முறை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதிநிதியாகவும் இருந்ததாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் 100 சபை அமர்வுகளில் 40 இல் மாத்திரமே பங்கேற்றிருந்ததாகவும் இந்த விடயத்தை ஊடகங்களில் அறிக்கையிட்டதாகவும் யு. எல். மப்றூக் தெரிவிக்கின்றார்.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது ரியா மசூர் தனது அரசியல் எதிரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த, ஜனநாயக விரோத செயற்பாட்டையும் தான் அறிக்கையிட்டதாக மப்றூக் கூறுகிறார்.

தன்னைப் பற்றி இதுபோன்ற செய்திகளை எவ்வாறு வெளியிட முடியும் என கேள்வி எழுப்பி தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரியா மசூருடன் சேர்ந்து தன்னைத் தாக்கிய மற்ற இருவரும் மது போதையில் இருந்ததாக அக்கரைப்பற்று பொலிஸில் செய்த முறைப்பாட்டில் யு. எல். மப்றூக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் ஆகியோரின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். உவைஸ் ஜூலை 2 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

ரியா மசூர் உள்ளிட்ட மூன்று பேர் தான் தாக்கப்பட்டபோது, தன்னைக் காப்பாற்றியது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். உவைஸ் தான் என ஊடகவியலாளர் மப்றூக் தனது தொழில்முறை சகாக்களிடம் கூறியுள்ளார்.

ஏனைய ஊடகவியலாளர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி யு.எல். மப்றூக் பெற்ற தகவல்களை தங்கள் செய்திக்கு ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளனர்.