35 ஆண்டுகளின் பின் யாழ் பலாலி ஆலயத்தில் பொங்கல்

0
104

35 ஆண்டுகளின் பின் யாழ் பலாலி நாகதம்பிரானுக்கு பொங்கல் வைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். யாழ்ப்பாணம் பலாலி நாகதம்பிரான் ஆலயத்தில் மக்கள் வழிபட 35 வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் ஆலயத்தின் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (27) முட்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் செய்வதற்கு சூழல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.