274 உயிர்களை பலி கொண்ட ஏர் இந்தியா விமான விபத்து; அடுத்த மாதமே ராஜினாமா; விமானி தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி

0
121

இந்தியா குஜாரத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 274 உயிர்கள் பலியான சம்பவம் இந்தியாவை பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களில் 56 வயதான அனுபவம் வாய்ந்த விமானி சுமீத் சபர்வால் பற்றிய உருக்கமான தகவல் வெளிவந்துள்ளது.

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி திருமணமாகாத சுமீத், மும்பையில் உள்ள தனது 90 வயது தந்தை புஷ்கராஜுடன் வசித்து வந்தார். உடல்நலம் குன்றியிருந்த தன் தந்தையை கவனிக்க அடுத்த மாதமே பணியை ராஜினாமா செய்ய போவதாக விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தந்தையிடம் உறுதியளித்திருந்தாராம்.

சுமீத்தின் குடும்ப நண்பர் லாண்டே என்பவர் என் நண்பன் இறந்ததை நம்ப முடியவில்லை. விபத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் ‘நான் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து முழுநேரமும் உங்களை கவனித்துக்கொள்கிறேன்’ என்று தந்தையிடம் சுமீத் உறுதியளித்தார்.

ஆனால், அதற்குள் இந்தத் துயரம் நடந்துவிட்டது  என்று கண்ணீருடன் கூறினார். மகனின் இழப்பால் மனம் உடைந்த தந்தை புஷ்கராஜியால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், அவரது கண்களிலிருந்து கண்ணீர் மட்டுமே வருவதாகவும் லாண்டே தெரிவித்தார்.

அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானம், சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் மோதி வெடித்துச் சிதறி இருந்தமை துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.