ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானை பாதுகாப்பாக உணர்ந்தது ஏன்?

0
69

பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவ நகரத்திற்கு அருகே பாதுகாப்பாக வாழ்ந்ததாக உணர்ந்தார்? உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாதம் இறுதியில் உலகின் பிற பகுதிகளையும் வேட்டையாடும். இந்தப் பிரச்சனை இந்தியா, பாகிஸ்தான் உறவுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனையாகவும் கவலையாகவும் உள்ளது. அதே பயங்கரவாதம் இறுதியில் உங்களைத் துரத்த மீண்டும் வரும்.

போர் மூலமாகவோ அல்லது போர்க்களத்தில் இருந்தோ பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என இந்தியா நம்பவில்லை. எங்கள் நலன்களுக்கு உதவும் ஒவ்வொரு நாடுகளுடனும் நல்ல உறவை விரும்புகிறோம் என தெரிவித்தார்.