ட்ரம்ப் குறித்து விமர்சனம்; மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்

0
71

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையில் சமீப காலமாகக் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இருவரும் ஒருவரையொருவர் விமர்சித்து, சமூக வலைத்தளங்களின் மூலம் மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கோருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகள் அளவு மீறிச் சென்றுவிட்டன. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.