வைத்தியருக்கு பைத்தியம்; விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அர்ச்சுனா பேச்சால் சபையில் சூடான எம்பி

0
24

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் இருந்த பொருட்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்களும் அடங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் பிரபாகரனுடையது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அர்ச்சுனா எம்.பி. கூறினார்.

அதோடு பிரபாகரன் 2009 க்கு முன்பு தாய்லாந்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றார்” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறினார். அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம். ஆனால் அவர் பைத்தியம் பிடித்துவிட்டது போல் தெரிகிறது என்றும் எம்.பி. மேலும் கூறினார்.