ஆசிய போதைப்பொருள் மாநாட்டில் யாழ் தமிழர் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். சிங்கப்பூரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஆசிய பசுபிக் மாநாடு இடம்பெற்று வருகின்றது.
இதில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசாவின் மகன் பிரமேஸ் என்பவர் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து பயணித்த குழுவில் ஒரே ஒரு தமிழராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்மாநாடு இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.