இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிடப் போவதில்லை; அமெரிக்க துணை ஜனாதிபதி

0
21

பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் நாங்கள் தற்போது தலையிடப் போவதில்லை.

பதற்றத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்வோம். இரு நாடுகளையும் ஆயுதங்களைக் கைவிடும்படி நாங்கள் கூறமுடியாது. இது மிகப் பெரிய போராகவோ அணு ஆயுத பிரச்சனையாகவோ மாறாது என நம்புகிறோம் என தெரிவித்தார்.