இஸ்ரேலில் இலங்கையர்கள் செய்யும் காரியத்தால் களங்கம்!

0
21

இஸ்ரேலில் இலங்கையர்கள் அதிக தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கோ அல்லது வேலை வாய்ப்புகளை இழப்பதற்கோ முழுப் பொறுப்பு அங்கு வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

இஸ்ரேலில் வசிக்கும் சில இலங்கையர்கள் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகி மனக் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர்கள் சமூக ஊடகங்களில் குழுக்களை உருவாக்கி பல்வேறு வசதிகளைப் பரப்பி போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

இது போன்ற செயல்கள் இலங்கை தொழிலாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என சுட்டிக்காட்டிய அவர் தொழிலுக்காக வரும் அனைத்து இலங்கையர்களும் தங்கள் தொழில்களை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு இரு நாடுகளின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் தொழில்வாய்ப்பினைப் பெற்ற 217 இலங்கையர்களுக்காக நடைபெற்ற நிகழ்வொன்றில் இணையவழி (Online) ஊடாக கருத்து தெரிவிக்கும் ​போதே இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் இதனைத் தெரிவித்தார்.