ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் ககல்லேல்லே சுமனசிறி தேரர் இராஜினாமா

0
9

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ககல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 10 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

கலாநிதி கல்லேல் சுமனசிறி தேரர் தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் வேந்தராக நியமனம் பெற்று குறுகிய காலத்திற்குள்ளேயே பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

”தான் ஏற்றுக்கொண்டுள்ள வேந்தர் பதவி எந்தவொரு தரப்பினரையும் வருத்தப்படுத்தினால் அல்லது பிளவுபடுத்தும் கருத்துக்களை உருவாக்கினால் அல்லது சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைத்தால் அந்த பதவியை விட நம் ஒற்றுமையையே பெரியதாகக் கருதுவேன்“ என இராஜினாமா கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.