இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் தேசிய பாதுகாப்பு தினமான இன்று (26) நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டின் பல பிரதேசங்களில் சுனாமியால் உயிரிழந்த தனது உறவினர்களை நினைவுகூரி நினைவேந்தல் நிகழை்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

