ஜெர்மனியில் 9 கோடிக்கு ஏலம் போகும் வெறும் வெள்ளைத் தாள் ஓவியம்!

0
29

ஜெர்மனியில் ரொபர்ட் ரேமன் வரைந்த வெறும் வெள்ளைத்தாள் ஓவியம் ரூ.9 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த ஓவியர் ரொபர்ட் ரேமென் வெள்ளை நிற பெயிண்டிங் வரைவதில் மிகச் சிறந்தவர் என்று கூறப்படுகிறது. ரொபர்ட் ரேமென் 1970ம் ஆண்டு வரைந்த வெள்ளை நிற கேன்வாஸ் ஒன்று ஜெர்மனியில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பெயிண்ட் தற்போது ஏலத்திற்கு வரவுள்ள நிலையில் ரூ.9 கோடிக்கு ஏலம்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது வெற்று தாளாக இருந்தாலும் இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும் இது ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் மற்றொரு ஓவியக்கலைஞர் கூறுகிறார்.

ரொபர்ட் ரேமன் இந்த ஓவியத்தை ஜெனரல் 52″ x 52″ என்ற தலைப்பில் வரைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் பார்க்கும் போது இந்த கேன்வாஸ் காலியாகத் தோன்றலாம். எனினும் இது வெள்ளை பற்சிப்பியால் வரையப்பட்டுள்ளது.

இது எண்ணெய் மற்றும் நிறமிகளுடன் கலந்த கண்ணாடி தூசியை உள்ளடக்கிய ஒரு ஊடகமாகும். இந்த ஓவியம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ரொபர்ட் ரேமென் (88) காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.