வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதவியாவைச் சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாயார் மகப்பேற்று வைத்தியநிபுணர் காமினி அவர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்ததார்.
இந்நிலையில் கரிப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டு வைத்தியர் திலீபன் அவர்களினால் சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன.
மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன் நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை வவுனியா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.