தேவைக்காக அநுர தமிழ் மக்களுக்கு செருப்பாகவும் இருப்பார்: கடுமையாக சாடிய கஜேந்திரன்

0
48

ஜே.வி.பியினுடைய புதிய அரசியலமைப்பை தமிழர்களிடத்தில் ஒப்பேத்தும் வரைக்கும் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தமிழ்களின் கால் செருப்பாகவும் இருப்பார் என என தமிழ் தேசிய மக்கள் முண்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை ஏமாற்றும் ஜே.வி.பியின் பசப்பு வார்த்தைகள் எல்லாம் தமிழர்களிடையே அவர்களுடைய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரைக்கும் மட்டும்தான். ஜே.வி.பியின் புதிய அரசியல் அமைப்பை ஒப்பேத்துவதற்கு அவர்களுக்கு தமிழர்களின் வாக்குக்கள் கட்டாயம் தேவை.