ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும்.
இவ்வாறான நிலையில் தற்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது 2வது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி அயத்துல்லா காமேனியின் அவசர அழைப்பின்படி ஈரான் நிபுணர்கள் சபையில் அங்கம் வகிக்கும் 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ருஹோல்லா கோமேனியை அடுத்த தலைவராக ஏற்கும் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இல்லாமல் அடுத்த தலைவர் தேர்வு நடப்பது வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சி மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சுவதால் இந்த தலைவர் தேர்வு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அலி காமேனி பதவி விலகி மொஜிதாபாவிடம் அதிகாரம் கைமாறும் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக மொஜிதாபா காமேனிக்கு இந்த தலைமை பொறுப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது ஈரான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் மொஜிதாபா ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.