சம்பளம் இன்றி பணியாற்றவுள்ள ஜேவிபி அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள்!

0
54

தேசிய மக்கள் சக்தியின் கீழ் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சம்பளம் இன்றி பணியாற்ற தயாராக இருப்பதாக அக்கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

அதற்கான ஒப்புதல் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுசந்த குமார கூறியுள்ளார் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை  இலங்கையில்  76 வருடங்களாக மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவதால் தற்போதைய அரசாங்கம் குறுகிய காலத்தில் கவிழாது எனவும் சுசந்த குமார இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.