தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் சபைக்குத் தெரிவு

0
52

பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வைத்தியர் ப. சத்தியலிங்கத்தைச் சபைக்கு அனுப்புவதற்கு அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டில் வேட்பாளராக இடம்பிடித்த இராமலிங்கம் சந்திரசேகரும் நாடாளுமன்றம் வருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தியும் தமிழர் ஒருவருக்குத் தேசியப் பட்டியலில் இடமளித்தால் அமையவுள்ள நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிப்பார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காவிட்டால் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை 27 ஆக அமையும். 2020 பொதுத்தேர்தலில் மக்கள் ஆணை மூலம் 25 தமிழ் எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்றத்திலும் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.

 தேசிய மக்கள் சக்தி – 13 தமிழர்களின் பெயர் விபரங்கள்

01. கிட்ணன் செல்வராஜா (பதுளை) – 60,041

02. அம்பிகா சாமுவேல் (பதுளை) – 58, 201

03. கே. பிரபு (மட்டக்களப்பு) – 14,856

04. கே.இளங்குமாரன் (யாழ்ப்பாணம்) – 32,102

05. எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா (யாழ்ப்பாணம்) – 20,430

06. ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் (யாழ்ப்பாணம்) – 17,579

07. சரோஜா போல்ராஜ் (மாத்தறை) – 148,379

08. கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா) – 33,346

09. எஸ். பிரதீப் – 112,711 (இரத்தினபுரி)

10. அருன் ஹேமச்சந்திர ( திருகோணமலை) – 38,368

11. செல்வதம்பி திலகநாதன் (வன்னி) – 10,652

12. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் – 9,280 (வன்னி)

13. இராமலிங்கம் சந்திரசேகர் (தேசியப் பட்டியல்)