புதியவர்களை முன்னிறுத்தி 13,295 வாக்குகளைப்பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி

0
34

தமிழ் மக்கள் கூட்டணி இந்த தேர்தலில் மணிவண்ணன் விஸ்விலிங்கம் தலைமையில் முற்றிலும் புதியவர்களை முன்னிறுத்தி 13,295 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அவர்களுடைய படிமுறை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவொன்று வெளியாகியுள்ளது.

முதலாவதாக 2010ம் வருடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி அந்த வருடம் நடந்த பொதுத்தேர்தலை எதிர் கொண்டார்கள்.

அத்தேர்தலை எதிர்கொள்ளும் பொழுது 3 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தார்கள் பத்மினி சிதம்பரநாதன், கயேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கயேந்திரன் குறிப்பாக வட கிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கைப் பெற்றுக் கொண்ட (140,000)க்கும் மேலாக முதலாவது நபராக செல்வராசா கயேந்திரன் இருந்தார்.

ஆனாலும் அவர்கள் அந்த தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகள் வெறும் 7,544 முடிவு தோல்வி. அடுத்த 5 வருடங்களின் பின்னர் 2015 ம் வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் 18,644 இரு மடங்கு வளர்ச்சி ஆனாலும் தோல்வி.

அதன் பின்னர் 2020 ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகள் 55,303 ஒருவர் தெரிவானார் முடிவு வெற்றி. அதன் பின்னர் 2024 நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் 27,986 ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இது அவர்களுடைய படிமுறை வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி. தமிழ் மக்கள் கூட்டணி 2020 ல் 35,927 வாக்குகளைப்பெற்று ஒருவர் தெரிவானார்.

இந்த தேர்தலை எதிர்கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி 4 கட்சிகளோடு இணைந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக போட்டியிட்டது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் , 1 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், 3 மாகணசபை உறுப்பினர்கள் மற்றும் 1 முன்னாள் மாகாணசபை அமைச்சர் என ஒரு நட்சத்திர பட்டாளத்தோடு களம் இறங்கியிருந்தது.

ஆனால் 2024 ம் வருடம் குறித்த வெற்றியாளர் தேர்தலிலிருந்து ஒதுங்கிக்கொள்ள கட்சியின் தேர்தல் தலைமையாக முற்றிலும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடன் முற்றிலும் புதிய முகங்களை கொண்ட அணியினர் அவர்கள் பாராளுமன்றமோ / மாகாணசபையோ போனவர்கள் அல்ல மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களாகவே அதிகபட்சம் கடைமையாற்றியவர்கள்.

இந்த அணியானது தனது முதலாவது பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளான 13,295 என்பது கொங்கிரஸ் 2010 ல் தனியாக போட்டியிட்டு பெற்றுக்கொண்டதை விடவும் கிட்டத்தட்ட இருமடங்கு பெரியது அதேபோல் இரண்டாவது தடவையாக 2015 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொங்கிரஸ் பெற்றுக் கொண்ட 18,644 வாக்குகளை விடவும் வெறும் 5000 வாக்குகளே குறைவானது.

தமிழ் மக்கள் கூட்டணியில் மணிவண்ணன் தலைமையில் பெற்றுக்கொண்ட வாக்குகளானது அவர்கள் பெற்றுக்கொண்ட பெரிய வெற்றியாகவே கருத்தில் கொள்ளப்படும்.

எனவே முதலாவது தேர்தலில்லேயே கொங்கிரசை விடவும் இரு மடங்கு வாக்குகளை தமிழ்மக்கள் கூட்டணி பெற்றுள்ளதை சிரார்கள் விளங்கிக்கொள்வார்கள் என எண்ணுகின்றேன்.

அப்படி விளங்கி ஏற்றுக்கொள்ளாத்தவறின் மனநிலையை ஏற்றுக்கொண்டு அவர்களை அப்படியே கடந்து போவதே சிறந்தது என இப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.