இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுர குமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவே முதல்தடவை ஆகும்.
இந்நிலையில் மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என மூன்று மொழிகளிலும் ஜனாதிபதி அனுர டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.