சமூக ஊடக செயற்பாட்டாளர் அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக: விசாரணை துரிதம்

0
53

பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளரான அஷேன் சேனாரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அதிகாரிகள் சிலர் ஊழல்வாதிகள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியமை தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக கடந்த 12ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அஷேன் சேனாரத்னவுக்கு தெரிவித்திருந்த போதிலும், அன்றைய தினம் அவர் வருகைத் தராமல் வேறு ஒரு திகதியை கோரியுள்ளார்.

அஷேன் சேனாரத்ன இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவொன்றில் இருந்து வேட்புமனு கோரியிருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதிகாரிகளை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.