நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை பொதுத்தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக்குரல் வெற்றி பெற்று நாடாளுமன்றில் அதிக ஆசனங்களை வெற்றி கொள்ளும் பட்சத்தில் ஊழலற்ற அரசியல் கலாசாரம் உருவாகும் என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக்கூட்டணியின் மற்றுமொரு வெற்றிப்பேரணி களுத்துறை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒரு தலைவர் முன்னதாகவே கிடைத்திருந்தால் அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பார் என தெரிவித்த அவர் மக்களுக்கு மீண்டும் ஒரு தடவை சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்ததுடன் இதன்போது பேரணியில் கலந்து கொண்ட மக்கள் உற்சாக வரவேற்பளித்திருந்தனர் பேரணியில் பெருமனவான மக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.