உக்ரைன் படையினருடன் வடகொரிய இராணுவ வீரர்கள் மோதல்: இதுவே முதன்முறை

0
63

உக்ரைன் படையினருடன் வடகொரிய இராணுவ வீரர்கள் முதன்முறையாக மோதலில் ஈடுபட்டுள்ளதாக உக்ரெய்னின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவுடனான இந்த முதல் போர் உலகில் உறுதியற்ற தன்மையின் புதிய அத்தியாயத்தைத் திறக்கின்றன என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் துருப்புக்கள் நிலைகொண்டுள்ள குர்ஸ்க் எல்லைப் பகுதியில் 11,000 வட கொரிய வீரர்கள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதென உக்ரெய்ன் தெரிவித்துள்ளது.

அண்மை நாட்களாக ரஷ்யாவின் போரில் வட கொரிய துருப்புக்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாக தென் கொரியா, அமெரிக்க உளவுத்துறை மற்றும் நேட்டோ ஆகியவை தெரிவித்தன. ஆனால் மாஸ்கோ மற்றும் பியோங்யாங் இதுவரை எந்த குற்றச்சாட்டுக்கும் நேரடியாக பதிலளிக்கவில்லை.