IMF இன் மூன்றாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கும்; அநுர நம்பிக்கை

0
107

அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் கூறினார். மூன்றாவது மதிப்பாய்வை முடிக்க அண்ணளவாக மூன்று மாதங்கள் ஆகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இரண்டு தேர்தல்கள் காரணமாக மூன்றாவது பரிசீலனை தாமதமாகியுள்ளது. மூன்றாவது மீளாய்வை முன்னதாக திட்டமிட்டபடி செப்டம்பரில் ஆரம்பித்திருந்தால், டிசம்பருக்குள் அதனை முடித்திருக்க முடியும் என்றும் கூறினார்.

மூன்றாவது தவணையைப் பெற்ற பிறகு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.