அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
புளோரிடாவில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றியபோது மேடையில் நின்றிருந்த ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி ‘இனி நான் உங்களை துணை ஜனாதிபதி என்று அழைக்கலாம்’ என்று கூறினார். மேலும் அவரது மனைவி உஷா சிலுக்குரிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
ஜே.டி. வான்ஸ் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் 2வது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷா சிலுக்குரி வான்ஸ் பெறுகிறார். உஷா சிலுக்குரி, ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.