ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும்? அரசியல் ஆய்வாளர் கருத்து!

0
104

அமெரிக்காவில் நடந்து முடிந்த 47ஆவது ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் இலங்கையின் ஆட்சியைச் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் எனவும் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.3