ஈரான் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி

0
102

ஈரான் பல்கலைக்கழக வளாகத்திற்கு அரைகுறை ஆடையுடன் வந்த மாணவியை பொலிசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக பல கடுமையான விதிகள் உள்ள நிலையில் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள பெண்கள் கடந்த பல ஆண்டுகளாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஈரானில் இருந்து ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகி உலகையே அதிர வைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ஈரானில் உள்ள ரன் இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழக வளாகத்தில் நின்றிருந்த அடையாளம் தெரியாத மாணவியை பொலிசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இதனை பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜூப் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சில சமூக ஊடக பயனர்கள் அந்த மாணவி தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்றே தனது ஆடைகளை கழற்றியதாக கூறுகின்றனர்.

இதுகுறித்த விசாரணைக்கு பின் வெளியான தகவலின்படி சம்பந்தப்பட்ட மாணவி தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு அரைகுறையாக சுற்றித் திரிந்ததை அடுத்து அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த மாணவியிடம் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் மாணவியை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு சர்வதேச அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்துள்ளன.