டிரம்ப் வெற்றி பெற டெல்லி சாமியார் சிறப்பு பூஜை!

0
69

அமெரிக்க ஜனாதிபதி தேரச்தலில் டிரம்ப் வெற்றி பெற டெல்லி சாமியார் சிறப்பு பூஜை நடத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (5) நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

இந்திய – ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் துலசேந்திரபுரத்தை சேர்த்தவர். கமலா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே அவர் வெற்றி பெற வேண்டி இங்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடவுளின் அனுக்கிரகத்தை டிரம்ப் பக்கம் திருப்ப டெல்லியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

மஹாமண்டலேஸ்வர் சுவாமி வேத் முதினானந்த சரஸ்வதி என்ற சாமியார் அமரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டெல்லியில் ஹாவன் எனப்படும் பூஜையை நடத்தியுள்ளார். அந்த பூஜையில் மோடியின் நண்பர் டிரம்ப் என்ற வாசகங்களுடன் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.