துன்கிந்த பேருந்து விபத்து: உயிரிழந்த மாணவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

0
29

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன.

இவர்களின் இறுதிக் கிரியைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது. இந்த விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்ததுடன், 35க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இதன்போது ஓட்டுநர் உட்பட 42 பேர் பேருந்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.