விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: இன்டர்போல் உதவியை நாடிய இந்தியா

0
102

இந்திய விமானங்கள் மீது வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 410 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி சென்னை விமான நிலையத்துக்கும் தொடர்ந்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் விளைவாக அடிக்கடி விமானங்கள் சோதனையிடப்படுகின்றன. இதனால் பாரியளவிலான பொருளாதார இழப்பும் ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல்களை விடுப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ள சர்வதேச குற்ற விசாரணை அமைப்பான இண்டர்போலின் உதவியை இந்திய அரசு நாடியுள்ளது.

அதுமட்டுமின்றி இவ்வாறான குற்றச் செயல்களை செய்பவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கணக்கை திரட்டி தருமாறும் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) விசாரணை அமைப்பிடம் இந்திய அரசு உதவி கேட்டுள்ளது. இதற்கு எஃப்.பி.ஐ விசாரணை அமைப்பும் சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.