2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த வங்கிக்கான விருதை ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா (SBI) பெற்றுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் 31 ஆவது ஆண்டுக்கான சிறந்த வங்கிக்கான விருது வழங்கும் விழாவில் இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவை மற்றும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் போன்றவற்றில் குறித்த வங்கியின் உறுதித் தன்மைக்கு இவ் விருது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.