அமெரிக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. குறித்த தேர்தல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கமலா ஹாரிஸை ஆதரித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிச்சேல் ஒபாமா முன்வைத்தார்.
தனது பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது,
“இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது.
நாம் கமலா ஹாரிஸ் மிகவும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவரிடம் சரியான கொள்கைகள் இருக்க வேண்டும். அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவர் கோபப்படக் கூடாது என்றெல்லாம் நாம் நினைக்கிறோம்.
அவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் அவர் கோபப்படக் கூடாது என்றெல்லாம் நாம் நினைக்கிறோம். கொள்கையை பற்றிய புரிதல், பேச்சாற்றல், நேர்மை, ஒழுக்கம் என எதையுமே நாம் அவரிடம் எதிர்பார்ப்பதே இல்லை” இவ்வாறு மிச்சேல் ஒபாமா தெரிவித்தார்.