இலங்கை தொடர்பில் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளும் எச்சரிக்கை

0
76

இலங்கையின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான அம்பாறை அருகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க பிரஜைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் அறிவிப்பை கருத்தில் கொண்டு கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதேவேளை ரஷ்யாவும் தனது பிரஜைகளுக்கு அருகம்பே குறித்த பயண எச்சரிக்கையினை விடுத்துள்ளது.