இளைய மகனுக்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில், சந்திரிகா!

0
19

அரசியல் தலைவரின் இளைய மகன் ஒருவர் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை மறைத்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே முன்னாள் ஜனாதிபதிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் தலைவர் ஒருவரின் இளைய மகன் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் மறைத்து வைத்திருப்பது 2015 இல் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அரசாங்கத்தினை அதனை மீட்டு நாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை என சந்திரிகா குமாரதுங்க சாடியுள்ளார். நான் எனது கண்ணால் அந்த வங்கி கூற்றை பார்த்தேன்.

ஆனால் அந்த ஆவணங்களின் மூலப்பிரதிகள் இல்லாததாதல் எங்களால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க,

தனது அரசாங்கம் நபர்களை துபாய்க்கு அனுப்பியது. ஆனால் எந்த பணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர்கள் வெளிநாட்டில் பணத்தை மறைத்து வைத்திருக்கின்றனர் என எனக்கு தெரிவித்தனர். துபாய் நஷனல் வங்கியிலேயே அந்த பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொலிஸ் – சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நாங்கள் துபாய்க்கு அனுப்பி வைத்தோம் என ரணில் பதிலளித்தார்.

அதோடு எங்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன துபாயின் வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஆனால் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை நீதிமன்ற உத்தரவின்றி விபரங்களை வழங்க முடியாது என அந்த வங்கி தெரிவித்துவிட்டது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் சிங்கப்பூர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும் குழுக்களை அனுப்பினோம் எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்திரிக்காவுக்கு பதி வழங்கியதாக கூறப்படுகின்றது.