இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘விக்சித் பாரத்’ அதாவது வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கு, மக்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியா இருக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டில்லியில் ஐ.பி.எஸ் பயிற்சி நிறைவு செய்த 2023 ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
“பயிற்சிகளை நிறைவு செய்யும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி செய்யும் காலத்தில் தங்கள் பயிற்சி காலத்தை நினைவில்கொள்ள வேண்டும்.
எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க பல முயற்சிகளை செய்திருக்கிறோம். அதன்படி ஜம்மு – காஷ்மீர் மற்றும் தீவிர இடதுசாரி பயங்கரவாதம் உள்ள பகுதிகளில் வன்முறைகள் 70 சதவிதம் குறைந்துள்ளன.
மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க காவல்துறை முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்க நீதி வழங்கப்பட காவல்துறை விழிப்புடன் கடமையாற்ற வேண்டும்.
2047 இல் பிரதமர் மோடியின் இலக்கான விக்சித் பாரத் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாகவும் இருக்கும். நாட்டு பிரதமருக்கும் சாதாரண மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை அரிசியலமைப்பு வழங்கியுள்ளது. அந்த உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு” என மேலும் தெரிவித்துள்ளார்.