இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான உறுப்பினர்கள்; தெரிவு செய்ததில் ஊழல்

0
19

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கான அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த உபவேந்தர் பேராசிரியர் வி.கனகசிங்கம் இத்தேர்தலில் எவ்வாறு முதலிடத்தைப் பெற்றார்?

இலங்கை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்ததில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கவுன்சிலின் மதிப்பீடு மிகவும் நெறிமுறையற்றது என்றும் அவர்களின் மதிப்பீட்டில் கடுமையான முரண்பாடு இருப்பதால் அது அவர்களின் விதிமுறைகளுக்கு முரணானது என்றும் பல்கலைக்கழக கல்வித்துறை சமூகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பேரவை (Council) உறுப்பினர்கள் இந்த துணைவேந்தர் தேர்தலில் போட்டியிட்ட சில வேட்பாளர்களால் பல்வேறு வழிகளில் செல்வாக்கு பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக மதுபானம் அருந்திய தொடர்ச்சியான பார்ட்டிகள் இந்த பல்கலைக்கழக சமூகங்களால் அவதானிக்கப்பட்டதுடன் புகைப்படங்களுடன் கூடிய ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவை விரைவில் நாட்டின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான பேரவை உறுப்பினர்களின் எதிர்மறையான தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ளதோடு இவ்வாறான முறைகேடான நிர்வாகத்திடம் இருந்தும் மக்களிடமிருந்தும் எமது பல்கலைக்கழகத்தைக் காக்க நடைபெற்ற இத்தேர்தலை ரத்து செய்யுமாறும் இந்த முறைகேடான சபையை உடனடியாக கலைக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர். 

மிக முக்கியமாக முன்னாள் G.A. மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய ஆணையாளர் ஆகியோர் இந்த தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர்களுடன் தொடர்ச்சியான மதுபான விருந்துகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்களும் கிடைத்துள்ளன.

இந்த council உறுப்பினர்கள் முன்னாள் அரசாங்கத்தின் போது உள்ளூர் அரசியல்வாதிகளின் வலுவான செல்வாக்குடன் நியமிக்கப்பட்டனர். குறிப்பாக இந்த மாவட்டத்தின் “ஆதிக்க அரசியல்வாதி” பிள்ளையான் அவர்களின் பரிந்துரையின் பேரில் மட்டக்களப்பில் இருந்து தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர் என்றும் பல்கலைக்கழக கல்வித்துறை சமூகம் குறிப்பிட்டனர்.