நடிகை தமிதாவை கழட்டிவிட்ட ஐக்கிய மக்கள் சக்தி; நம்பிச்சென்றவருக்கு ஏமாற்றம்!

0
68

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகை தமிதா அபேரத்ன பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்காக இன்று (11) இரத்தினபுரி மாவட்டச் செயலகத்திற்கு வந்தபோது ​​அந்தப் பட்டியலில் அவரது பெயர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிதா அபேரத்ன நேற்று (10) ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.