யாழில் இலங்கைத் தமிழரசுக்கட்சி இரு அணிகளாக போட்டி

0
90

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஒரு அணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை மதியம் நாடாளுமன்ற தேர்தலிற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாளாக உள்ள நிலையில் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஒரு அணியினர், வேட்பு மனுக்களை யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களுடன் சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஸ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜக்கிய மக்கள் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும் இன்று யாழில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.