முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்குக்கும் வடக்கில் மதுச்சாலை பெர்மிட்

0
49

ஈ.பி.டி.பி சேர்ந்த முன்னாள் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் மதுபானச்சாலை பெர்மிட்டுகள் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பைப் பெற்று வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் அவற்றைக் கை மாற்றியுள்ளார்.

இந்த இரு மதுபானசாலைகளையும் திறப்பதற்காக பிரதேச செயலத்திற்கான கட்டணத்தை செலுத்த முயன்ற போதும் பிரதேச செயலகம் அதனை மறுத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தப்புரம் பகுதியில் அமைப்பதற்கான அனுமதிகளே திலீபன் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இரு அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடங்களில் மதுபானசாலைகளைத்திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன எனத் தெரிகின்றது.

இதே போன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதானியான சாகல ரட்ணாயக்காவின் சிபாரிசில் வழங்கப்பிட்ட ஒரு மதுபானச்சாலைக்கான பெர்மிட்டின் அடிப்படையில் வவுனியா நெடுங்கேணியில் ஒரு பார் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது.

இதற்கான அனுமதி சாகல ரட்ணாயக்க ஊடாக பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாகல ரட்ணாயக்க எழுத்த மூலம் கடிதம் வழங்கிய இந்த மதுபானசலைக்காகன அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

பாலநாயகம் என்னும் பெயரில் இந்த மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தந்தையின் மகனான வி.விதுர்சனின் பெயரில் பரந்தன், கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் 2024.06.11 அன்று பணம் செலுத்தப்பட்டு மதுபானச்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.