இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர்: துணைத் தலைவர் நியமனம்

0
118

இலங்கை சட்டத்தரணி சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமித்துள்ளனர். அந்தவகையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக பி.சி அனுர மத்தேகொடவையும், துணைத் தலைவராக பி.சி ராசிக் சரூக்கையும் நியமித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கௌசல்ய நவரத்ன மற்றும் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இந்ததிஸ்ஸ ஆகியோர் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.