‘Harry Potter’ திரைப்படத்தின் பேராசிரியர் மரணம்: காலத்தால் மறக்கமுடியாத கதாபாத்திரம்

0
86

மிகவும் பிரபலமான திரைப்படமான ஹெரிபொட்டரில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் காலமானார். இவர் ஹெரிபொட்டர் திரைப்படத்தில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

89 வயதான இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். சுமார் 60 வருடங்களாக திரைத்துறையில் இருந்த இவர் 60க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

‘The prime of miss jean brodic, California suite’ ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இரண்டு ஒஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.