வடக்கு மாகாண ஆளுநர் இவரா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தி!

0
149

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை (24-09-2024) பொறுப்பேற்றுள்ளது.

இதையடுத்து, மாகாண ஆளுநர்களுக்கான புதிய நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக, முன்னாள் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதன்படி அவருக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை வடமாகாண ஆளுநர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.