நாடாளுமன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்

0
111

நாடாளுமன்ற தேர்லதலை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தேர்தல் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணைக்குழுவை உத்தியோகபூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே இயக்கத்தில் உள்ளன” என்று அவர் கூறினார்.

“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், வேட்பாளர்களுக்கான வேட்புமனுக்கள் 7 முதல் 17 நாட்களுக்குள் அழைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் ​​நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஜனாதிபதியால் ஒதுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நாடாளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.