புதிய ஜனாதிபதிக்கு கர்தினால் ஆசிர்வாதம்

0
43

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் கடினமானதும் மற்றும் பாரதூரமான பணி எனவும் அதனை நிறைவேற்றுவதற்காக ஆசிர்வாதத்தையும் பூரண ஆதரவையும் வழங்குவதாக பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் ஆயர் இல்லத்துக்கு வருகைத் தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதன் பின்னர் பேராயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையில் அதிகளவான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக பதவியேற்ற எங்களுடைய அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்குள் தேவையான மாற்றத்தை உருவாக்க வேண்டிய பாரதூரமான கடமை தற்போது அவரின் தோள்களுக்கு மேல் நாட்டு மக்கள் சுமத்தியுள்ளதாக நான் நினைக்கின்றேன்.

இது ஒரு பாரதூரமான நிலை. அது ஒரு கடினமான சூழலாகவும் இருக்கலாம். எனினும், நாம் அவருக்கு முழுமையான ஆதரவையும், ஆசிர்வாதத்தையும் அதற்காக வழங்குவதாக உறுதியளிக்கிறோம்.

அதேவேளை, விசேடமாக ஏழை மக்கள் பற்றியும் சிந்தித்து உங்களுடைய சேவை மற்றும் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்” என தெரிவித்தார்.