ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் ஒரே ஒரு வரியில் அனுரவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு வாழ்த்து என மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
