2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38, 20, 738 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 17,140,354 வாக்காளர்களில், 13,619,916 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, 79.46 வீதமான வாக்குகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 97.8% செல்லுபடியாகும் வாக்குகள் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் 300, 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை மொத்த வாக்குகளில் 2.2 வீதம் ஆகும்.