சமூக வலைதளங்களில் முகமது நபியை அவமதித்த நபருக்கு மரண தண்டனை விதிப்பு!

0
119

சமூக வலைதளங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

லாகூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான் 2024ல் சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் நீதிமன்றம் இர்பானுக்கு மரண தண்டனை விதித்ததுடன் இலங்கை மதிப்பில் சுமார் 107,777 ரூபா அபராதமும் விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதரான முகமது நபியை அவமதிப்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.